IMG 20221101 WA0007
அரசியல்இலங்கைசெய்திகள்

இளைஞர்களை நெறிப்படுத்தும் சக்தி விளையாட்டுக்களுக்கு உண்டு – சிறீதரன் எம்.பி

Share

எமது இனத்தின் வளரிளம் பருவத்தினரின் சிந்தனாசக்திகளையும், சமூக நலச் செயற்பாடுகளையும் மலினப்படுத்துவதற்காக, அவர்களைத் திட்டமிட்டுத் திசைதிருப்பும் சதிச் செயற்பாடுகளுள் சிக்குண்டுபோகாது, முறையான செல்நெறி நோக்கி இளைஞர்களை வழிப்படுத்தும் சக்தி விளையாட்டுக்களுக்கு உண்டு என நான் கருதுகிறேன்.

உருத்திரபுரம் விளையாட்டுக் கழகத்தினரின் ஏற்பாட்டில், உருத்திரபுரம் அன்னையின் கரங்கள் அமைப்பின் அனுசரணையில் நேற்றைய தினம் (2022.10.31) நடைபெற்ற அன்னையின் வெற்றிக் கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“அதன் வெளிப்பாடாகவே உருத்திரபுரம் விளையாட்டுக்கழக இளைஞர்கள் நேர் சிந்தனையோடும், ஒற்றுமைப்பட்ட குழு மனோநிலையோடும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையக்கூடிய பல்வேறு போட்டித்தொடர்களை கிரமமாக நடாத்தி வருகிறார்கள்.

அவர்களது இத்தகு சிந்தனைகளும் செயற்பாடுகளுமே அவர்களது தனிப்பட்ட வளர்ச்சிப் படிகளுக்கும், கழகத்தின் பெருவளர்ச்சிக்கும் காரணமாக அமைந்துள்ளது. இவ் இளைஞர்களின் செயற்பாடுகள் மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்” என்றார்.

IMG 20221101 WA0009 IMG 20221101 WA0008 IMG 20221101 WA0006 IMG 20221101 WA0005 IMG 20221101 WA0004

#Srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...

Featured mm
இலங்கை

பெக்கோ சமன் தாயார் படுகொலை – பின்னணியில் பழிவாங்கும் படலம்!

பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின்...

Arrest 13
இலங்கை

இலகுவாக வீடு கட்டிக்கொள்ளலாம் – தவணைமுறையில் பணம் பெற்று பலரிடம் மோசடி செய்த நபர் கைது.

வீடு கட்டித் தருவதாகக் கூறி சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு நபர்களிடம் பெருந்தொகை பணத்தை மோசடி...