23 64d624482b1ba
இந்தியாஇலங்கைசெய்திகள்

கச்சதீவு தொடர்பில் பிரதமர் மோடி தகவல்

Share

கச்சதீவு தொடர்பில் பிரதமர் மோடி தகவல்

கச்சதீவை காங்கிரஸ் கட்சி எப்படி தாரை வார்த்து கொடுத்தது என்பது பற்றிய புதிய உண்மைகள் வெளிப்பட்டுள்ளன என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த கச்சதீவு 50 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் ஆட்சியின்போது, ஒப்பந்தம் போடப்பட்டு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், கச்சதீவு பற்றி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பெற்ற தகவலை குறிப்பிட்டு பிரதமர் மோடி எக்ஸ் சமூக தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில், கச்சதீவை காங்கிரஸ் கட்சி எப்படி தாரை வார்த்து கொடுத்தது என்பது பற்றிய புதிய உண்மைகள் வெளிப்பட்டு உள்ளன என தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் ஒவ்வோர் இந்தியனையும் ஆத்திரப்படுத்தி உள்ளது.

காங்கிரசை நாம் ஒருபோதும் நம்ப முடியாது என்று மக்களின் மனங்களில் பதியும் வகையில் மற்றொரு விடயம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்தும் வகையில், 75 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி பணியாற்றும் விதம் தொடர்ந்து வருகிறது என அவர் பதிவிட்டு உள்ளார்.

Share
தொடர்புடையது
Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...

Gotabaya Rajapaksa 2
இலங்கை

சற்றுமுன்னர் நீதிமன்றில் முன்னிலையானார் கோட்டாபய ராஜபக்ச.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ...