law
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்திய மீனவர்கள் விடுதலை!

Share

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் கடந்த 6 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களில் 14 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட தோடு 14 வயது சிறுவனை சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க மன்னார் நீதவான் கடந்த 7 ஆம் திகதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் குறித்த 15 பேரூம் இன்றைய தினம் (17) மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட 14 இந்திய மீனவர்களும்,சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகளின் கண்காணிப்பில் ஒப்படைக்கப்பட்ட 14 வயது சிறுவனும், இவ்வாறு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த மீனவர்களை தலா ஒரு வருட சிறைத்தண்டனையை 10 வருடங்களுக்கு ஒத்தி வைத்து குறித்த மீனவர்களை விடுதலை செய்தார்.

இந்த நிலையில் குறித்த 15 பேரும் மிகிரியாகம முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து அவர்கள் நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்திய உயர்ஸ்தானிக அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் படகு ஒன்றின் உரிமையாளர் இன்றைய தினம் (17) சட்டத்தரணி ஊடாக மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகி தனது படகை விடுவிக்க கோரி சட்டத்தரணி ஊடாக மன்றில் விண்ணப்பம் செய்தார்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த படகின் உரிமையாளரை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரியிடம் வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிட்டதோடு, குறித்த விசாரணை யை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...