இலங்கைக்கு கடன் வழங்கும் இந்தியா: சீனாவை எதிர்க்கவா?

Dollar

இலங்கைக்கு 100 கோடி அமெரிக்க டொலர் கடனாக வழங்குவதற்கு இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள டொலர் பற்றாக்குறையை சமாளிப்பதற்கும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கும் இக்கடன் வழங்கப்படுகிறது எனக் கூறப்படுகிறது.

இந்தியா வழங்கும் இந்தக் கடன் பணமாக மீளப்பெறப்படாமல், இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான கடன் வசதியாக பயன்படுத்தப்படும் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.

எரிபொருள் கொள்வனவுக்கு 50 கோடி அமெரிக்க டொலர்களையும், பரிமாற்றக் கடனாக 40 கோடி அமெரிக்க டொலர்களையும் இலங்கைக்கு வழங்குவதற்கு இந்தியா ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதேவேளை நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவின் அண்மைய இந்திய விஜயத்தின் போதே இதுதொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது

இதேவேளை, அண்மையில் சீனாவிடமிருந்து 150 கோடி அமெரிக்க டொலர் கடனுதவி கிடைத்துள்ளதாகவும், கடனாக ஒரு வருடத்தில் திருப்பிச் செலுத்தும் அடிப்படையில் கட்டாரிடமிருந்து 50 கோடி அமெரிக்க டொலர்களைப் பெறப்பட உள்ளதாகவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Exit mobile version