கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் நாட்டில் போசாக்கு குறைபாடு 2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (12) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக குழந்தைகளின் போசாக்கு நிலை தொடர்பில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அண்மைய நாட்களில் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment