20 14
இலங்கைசெய்திகள்

கல்வியமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Share

கல்வியமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

2023/2024 சாதாரண தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை உயர்தர நிபுணத்துவப் பிரிவுக்கு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த வருடங்களில் உள்வாங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலான மாணவர்களை தொழிற்கல்வி பாடத்துக்கான ஆர்வத்தை அதிகரிப்பதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், கல்வி அமைச்சு 2024/2025 கல்வியாண்டுக்கான உயர்தர தொழில்முறை பாடப்பிரிவுக்காக 12ஆம் தரத்துக்கு மாணவர்களை அனுமதிப்பது மற்றும் பாடநெறியின் கல்வி நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அனைத்து அதிபர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாகவும்  தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் மாணவர்களுக்கான கொடுப்பனவுகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.

அந்த வகையில், அடுத்த வருடத்தின் பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான பாதீடு சமர்ப்பிக்கப்படும் எனவும், அரச பணியாளர்களுக்கான வேதன அதிகரிப்பு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவுகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும்  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...