Ranjan ramanayake
அரசியல்இலங்கைசெய்திகள்

கட்சி தாவ மாட்டேன்!

Share

” நிபந்தனை அடிப்படையிலேயே எனக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே, சில விடயங்கள் தொடர்பில் கதைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு கதைத்தால் மீண்டும் தண்டனை அனுபவிக்க வேண்டிவரும்.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

நீதிமன்றத்தை அவமதித்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வந்த ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய நிபந்தனையுடனான பொது மன்னிப்பின் கீழ் இன்று பிற்பகல் விடுதலை செய்யப்பட்டார்.

அதன்பின்னர் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

” எனக்கு உண்மை கதைத்துதான் பழக்கம். ஆனாலும் நிபந்தனை உள்ளது. செய்வதற்கு வேறு வழில்லை. முழுமையான சுதந்திரம் கிடைக்காமை கவலையளிக்கின்றது. எனினும், மன்னிப்பு வழங்கியதற்காக ஜனாதிபதிக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, பிரதம நீதியரசர், நீதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட அனைவருக்கும் நன்றிகள். எனக்காக குரல் கொடுத்த மக்களுக்கும் நன்றி.

நான் மாறப்போவதில்லை. கட்சி மாறவும் மாட்டேன். ” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...