13 19
இலங்கைசெய்திகள்

தென்னை செய்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

Share

தென்னை செய்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தேங்காய் நெருக்கடிக்கு தீர்வாக தென்னை செய்கையாளர்களுக்கு உர மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் சமந்த வித்யாரத்ன(Samantha Vidyarathna) தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் 55,000 மெற்றிக் தொன் உரத்தில் 27,500 மெற்றிக் தொன் தென்னை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,“எங்கள் அமைச்சின் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் தென்னந்தோப்புகளில் 5 வருடங்களாக உரம் இடப்படவில்லை. இதன் மூலம் விளைச்சல் குறைவு என்று அர்த்தம்.

சாதாரண மக்கள் உரம் இடும் நிலையில் இல்லை. ஒரு உரக்கப்பல் வந்தது. சமீபத்தில் நாங்கள் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு அதில் பாதியை தென்னை பயிர்ச்செய்கைக்கு வழங்க முடிவு செய்தோம்.

தற்போதைய தென்னை நெருக்கடிக்கு அடுத்த வருடத்திற்குள் தீர்வு காண முடியும்.” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...