tamilni 352 scaled
இலங்கைசெய்திகள்

அரச சொத்துக்களை காணவில்லை! உதய கம்மன்பில குற்றச்சாட்டு

Share

அரச சொத்துக்களை காணவில்லை! உதய கம்மன்பில குற்றச்சாட்டு

இலங்கையில் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரையிலான காலப் பகுதியில் 5.5 ட்ரில்லியன் ரூபா(553000 கோடி ரூபா) பெறுமதியான அரச சொத்துக்கள் காணாமல் போயுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்ட சொத்துக்களில் இவ்வாறு 5.5 ட்ரில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் அரச ஆவணங்களில் பதியப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த தகவல்களை கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் பிரகாரம் வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் கார் ஒன்றை கொள்வனவு செய்ய நூறு இலட்சம் ரூபா செலவிட்டால் அரச சொத்துக்கள் நூறு இலட்சத்தினால் அதிகரிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஐநூறு இலட்சம் ரூபா செலவில் பாடசாலை கட்டடமொன்றை அமைத்தால் அதுவும் அரச சொத்து அதிகரிப்பாக பதிவிடப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் சொத்துக்களை கொள்வனவு செய்வதற்காக செலவிட்ட தொகையில் 68 வீதமான சொத்துக்கள் பற்றிய விபரங்கள் இல்லை என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 2013ம் ஆண்டில் சொத்துக்களை கொள்வனவு செய்வதற்காக செலவிடப்பட்ட தொகைகளில் 94 வீதமானவை பற்றிய பதிவுகள் எதுவும் கிடையாது என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...