ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடர் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அக் கூட்டத் தொடரில் பங்கேற்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச இன்று அதிகாலை நியூயோர்க் புறப்பட்டுள்ளார்.
இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி எதிர்வரும் 22 ஆம் திகதி உரையாற்றவுள்ளார்.
நாட்டின் மனித உரிமைகள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்ட முன்னேற்றகர நடவடிக்கைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.
மேலும் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டை தொற்றிலிருந்து மீட்டெடுப்பது மற்றும் பொருளாதார மற்றும் சமூக ரீதியான வீழ்ச்சியை சரி செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.
அத்துடன் இந்த மாநாட்டில் பங்கேற்கும் இலங்கைக்கு ஆதரவான பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களையும் ஜனாதிபதி சந்தித்து பொருளாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
Leave a comment