இந்திய – இலங்கை மக்களின் நலனுக்காகவும் அவர்களிடையிலான சகோதரத்துவ உறவுக்காகவும் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் சங்கைக்குரிய மகாநாயக்க தேரர்களிடம் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆசி பெற்றிருந்தார்.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் டுவிட்டர் பதிவிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.
புதுடெல்லியில் ஏப்ரல் 20ஆம் திகதி நடைபெற்ற 2023 உலக பௌத்த மாநாட்டின் ஆரம்ப உரையில் பிரதமர் நரேந்திர மோடி, சுட்டிக்காட்டிய புத்தபெருமானின் போதனைகளுக்கு அமைவாக, அனைவரினதும் நலன்களுக்காக பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தின் கீழ் இந்தியாவால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை பாராட்டிய சங்கைக்குரிய இரு சிரேஸ்ட தேரர்களுக்கும் உயர் ஸ்தானிகர் நன்றியினைத் தெரிவித்திருந்தார்.
இரு நாடுகளினதும் மக்களுக்காக கலாசாரத்துறைசார் மேலதிக ஒத்துழைப்பு மற்றும் மேம்பட்ட தொடர்புகள் மூலமான நன்மைகள் குறித்தும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துரையாடப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
#SriLankaNews
Leave a comment