202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்தியாவுக்கு கடத்தவிருந்த தங்கம், வலம்புரி சங்குடன் மூவர் கைது!

Share

மன்னார் பேசாலை கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை (25) இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது நாட்டிலிருந்து கடத்த முயன்ற சுமார் 470 கிராம் தங்கம் மற்றும் சங்கு (வலம்புரி) கைப்பற்றப்பட்டன.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 03 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பேசாலை-தலைமன்னார் கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை (25) இரவு கடற்படையினர் விசேட ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது பேசாலை கடற்கரையில் இருந்து சந்தேகத்திற்கிடமான வகையில் பயணித்த படகு ஒன்றை பரிசோதித்தபோது குறித்த படகில் இருந்து 470 கிராம் தங்கம் மற்றும் வலம்புரிச் சங்கு ஆகியவற்றை கடற்படையினர் மீட்டனர்.

குறித்த சம்பவத்துடன் ஈடுபட்ட 03 சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதுடன், அந்த பொருட்களை கடத்த பயன்படுத்திய டிங்கி படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

கைப்பற்றப்பட்ட தங்கத்தின் சந்தை மதிப்பு ரூ. 09 மில்லியன் என கடற்படையினர் தெரிவித்தனர்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 முதல் 39 வயதுக்குட்பட்ட புத்தளம் மற்றும் பேசாலை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த சந்தேக நபர்கள், தங்கம், சங்கு மற்றும் படகுகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள சுங்க அலுவலகத்தில் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...