24 662336a79689c
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையின் மாணவனின் துணிகர செயல்

Share

தென்னிலங்கையின் மாணவனின் துணிகர செயல்

ஹொரண பிரதேசத்தில் தங்க நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முயன்ற திருடர்களை சிறுவன் ஒருவர் துணிகரமாக செயற்பட்டு தடுத்து நிறுத்தியுள்ளார்.

திருடர்கள் மீது சைக்கிளை வீசிய 16 வயதுடைய பாடசாலை மாணவனின் துணிச்சலான செயற்பாட்டினால் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவர்களிடம் இரண்டு தங்க சங்கிலிகள் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 16ஆம் திகதி மதியம் ஹொரணை வாவல கந்தரவத்தை வீதியில் பழக்கடை நடத்தி வரும் பெண்ணொருவரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பலவந்தமாக பறித்துக் கொண்டு தப்பி செல்ல முயற்சித்துள்ளனர்.

இதற்கிடையில், பாடசாலை மாணவரான அவரது 16 வயது மகன் சம்பவத்தை பார்த்துவிட்டு, தான் வந்த சைக்கிளை திருடர்களின் உடல் மீது வீசிவிட்டு, மோட்டார் சைக்கிளின் சாவியை கையில் எடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஹொரண தலைமையக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அதிகாரிகள் குழுவொன்று உடனடியாக குறித்த இடத்திற்கு வந்து சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்கள் புலத்சிங்கள நரகல பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 25 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...

bike accident 1
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி.

நேற்றைய தினம், சிலாபம் – ஆனமடுவை வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்...

oil price 14 2
இலங்கை

மீண்டும் அதிகரிக்கிறதா எரிபொருள் விலை ?

இன்று நள்ளிரவு முதல், மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் உலக சந்தையில்...