20220625 161819 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டை எம்மிடம் தாருங்கள்! – தீர்வை ஏற்படுத்துவோம் என்கிறார் அனுர

Share

இந்தியாவும் ஜப்பானும் ரஷ்யாவும் நமக்கு உதவும் என நாம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் இன்று எமக்கு உதவி செய்யலாம். ஆனால் தொடர்ச்சியாக அவர்கள் எங்களுக்கு உதவி செய்ய போவது கிடையாது. பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையை எம்மிடம் தாருங்கள். நாம் தேர்தலொன்றை நடத்தி ஆறு மாதத்திற்குள் ஒரு தீர்வினை நாம் ஏற்படுத்துவோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியினுடைய யாழ்ப்பாண மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எமது கட்சி தொடர்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களிடையே ஒருவித சந்தேகம் காணப்படுகின்றது. அதனை நாம் ஏற்றுக்கொள்கிறோம். எமது தலைமுறை கடந்த காலத்தில் யுத்தத்தில் ஈடுபட்டது. தென்னிலங்கையில் ஏற்பட்ட இனவாதமே வடக்கில் பிரபாகரன் ஆயுதமேந்த காரணமானது.

எமது குழந்தைகளும் எதிர்காலத்தில் யுத்தத்தில் ஈடுபட வேண்டுமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். யுத்த காலத்தில் வடக்கு கிழக்கில் பாரிய அழிவுகள் ஏற்பட்டது.

இந்தியாவும் ஜப்பானும் ரஷ்யாவும் நமக்கு உதவும் என நாம் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் இன்று எமக்கு உதவி செய்யலாம். ஆனால் தொடர்ச்சியாக அவர்கள் எங்களுக்கு உதவி செய்ய போவது கிடையாது. பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையை எம்மிடம் தாருங்கள். நாம் தேர்தலொன்றை நடாத்தி ஆறு மாதத்திற்குள் ஒரு தீர்வினை நாம் ஏற்படுத்துவோம்

வடக்கில் பல அரசியல் கட்சிகள் உள்ளன. அவை பெரும்பாலும் இன்று பொதுவான பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்கின்ற நிலைமை காணப்படுகின்றது. நாம் அனைவரும் தேசிய அரசியல் நீரோட்டத்தில் உள்நுழைய வேண்டும். தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் போதே நாங்கள் அனைத்து வகையான இனவாதத்தையும் மதவாதத்தையும் எதிர்த்து செயற்ப்பட முடியும்.

வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்ற பேதமின்றி நாங்கள் ஒன்றிணைய வேண்டும். காணாமல்போனோர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவேண்டும். காணாமல்போனோரின் உறவுகள் எந்தளவு தூரம் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பது எனக்கு தெரியும்.

எனது சகோதரன் காணாமல் போயிருந்தார். காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில் உண்மையை தேடும் சபை ஒன்றை உருவாக்குமாறு நாம் கடந்த காலத்தில் வலியுறுத்தியிருந்தோம். ஆனால் அப்போது இருந்த அரசு அதனை ஏற்கவில்லை.

மக்கள் தங்களுக்குரிய மொழியில் இங்கு தமது செயற்பாடுகளை முன்னெடுக்க உரிமை காணப்பட வேண்டும். இந்த நாட்டில் பாரிய திருப்புமுனை ஏற்படவேண்டும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...