rtjy 97 scaled
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு

Share

ஜனாதிபதி பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு

2025 ஆண்டு முதல் கல்விப் பொதுதராதர உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளை உரிய நேரத்தில் நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் அரசியல் அதிகாரங்களுக்கோ அல்லது வேறு எவருக்கோ பரீட்சை திகதியை சட்டத்தின் மூலம் மாற்ற முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.

மேலும் தெரியவருகையில், இந்த ஆண்டும் பரீட்சைகள் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் நடத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

2025 ஆம் ஆண்டு முதல் பரீட்சைகளை நடாத்துவதற்கு பிள்ளைகளுக்கு சுமை ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சைகளை உரிய நேரத்தில் நடாத்துவதற்கு நாடாளுமன்ற சட்டத்தின் ஊடாக ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கல்வி அமைச்சருக்கு வழங்கிய பணிப்புரையிலும் காணப்படுகின்றது.

அரசியல் அதிகாரங்களுக்கோ அல்லது வேறு எவருக்கோ பரீட்சை திகதியை சட்டத்தின் மூலம் மாற்ற முடியாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் பரீட்சைகள் பிற்போடப்படுவதனால் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் புலமைப்பரிசில்கள் பெறுவது, வயது வரம்பைத் தாண்டிச் செல்வது போன்ற பல பாதகமான விளைவுகளை மாணவர்கள் சந்திக்க நேரிடும் என அண்மையில் கல்வி நிபுணர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...