gota 1 1
இலங்கைசெய்திகள்

எரிபொருள் இறக்குமதி! – ஐக்கிய அரபு செல்கிறார் ஜனாதிபதி

Share

எரிபொருள் இறக்குமதி சம்பந்தமாக நேரடி பேச்சுகளை நடத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஐக்கிய அரசு இராஜ்ஜியத்துக்கு  விரைவில் பயணம் மேற்கொள்ள உத்தேசித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று (28)  நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது , ஆளுங்கட்சி சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரும்,  முன்னாள் அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே இந்த தகவலை வெளியிட்டார்.

அத்துடன், ரஷ்யா மற்றும் இந்தியாவிலிருந்து எரிபொருளை கொள்வனவு செய்வது சம்பந்தமான இராஜதந்திர மட்டத்திலான நகர்வுகளையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேற்கொண்டு வருகின்றார் எனவும் அவர் கூறினார்.

” எதிர்வரும் 10 ஆம் திகதியிலிருந்து எரிபொருளை முறையாக விநியோகிப்பதற்கான வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக எரிபொருள் நெருக்கடி நிலை தொடர்பில் ரஷ்ய ஜனாதிபதியுடன், எமது ஜனாதிபதி  ஜனாதிபதி பேச்சு நடத்தி இணக்கப்பாட்டுக்கு வருவார். இதற்கான ஏற்பாடுகள் தூதரகம் ஊடாக முன்னெடுக்கப்பட்டு,  ரஷ்ய ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பட்டுள்ளது. ” எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டார்.

அத்துடன், இந்தியாவிலிருந்து எரிபொருளை விரைவில் கொள்வனவு செய்வது குறித்து இந்திய பிரதமர்,  வெளிவிவகார அமைச்சர் மற்றும் எரிசக்தி அமைச்சருடன் ஜனாதிபதி கலந்துரையாடல்களில் ஈடுபட்டுவருகின்றார் எனவும் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் 05 ஆம் திகதியிலிருந்து அடுத்த மூன்று மாதங்களுக்கு தடையின்றி எரிவாயுவை வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தகவல் வெளியிட்டார்.

அதேவேளை, எரிபொருள் கொள்வனவு சம்பந்தமாக பேச்சு நடத்துவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கட்டாருக்கு பயணம் மேற்கொண்டு, இன்று முக்கிய சந்திப்புகளை நடத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சும் வெற்றியளிக்கும் சாத்தியம் இருப்பதாக நம்பும் அரசு, தற்போதைய நெருக்கடி நிலைமை விரைவில் தீரும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

எனினும், இந்த அரசால் நெருக்கடியை தீர்க்க முடியாதெனவும்,  மக்களை ஏமாற்றவே ஊடக சந்திப்புகள் நடத்தப்படுகின்றன எனவும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
Anura Kumara Dissanayake and Sajith Premadasa
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடகங்களை நிறுத்திவிட்டுப் பதில்களையும் தேர்தலையும் நடத்துங்கள் – சஜித் பிரேமதாச ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை!

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஊடக நிறுவனங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் அறிக்கைகள் வெளியிடுவதற்குப் பதிலாக, அவர்களுக்கு எதிராக...

images 21
செய்திகள்அரசியல்இலங்கை

நாமல் ராஜபக்ஷவின் கல்வித் தகுதி சர்ச்சை: ‘அவதூறுகளுக்கு நுகேகொடப் பேரணியில் பதிலளிப்பேன்’ – நிராகரிப்பு!

தனது கல்வித் தகுதிகள் குறித்துப் பரவி வரும் கூற்றுக்களை இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய...

images 11 2
செய்திகள்அரசியல்இலங்கை

திருகோணமலை விஹாரை கட்டுமானம்: ற்போதைய நிலையைத் தொடர நீதவான் உத்தரவு!

திருகோணமலை கோட்டை சாலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விஹாரைக்குச் சொந்தமான தற்காலிகக் கட்டிடத்தின் தற்போதைய...

23 64dd30bee2ed3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழில் அதிர்ச்சி: வடமராட்சிப் பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை – பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவர் பலி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரணவாய் கூடாவளவு பகுதியில் நேற்று (நவம்பர் 19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...