நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தினமும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புக்களில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவிக்கையில்,
அனுமதிபெற்றவர்களுக்கு மாத்திரமே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கேன்கள் மற்றும் பெரல்களில் எரிபொருள் வழங்கப்படும்.
எரிபொருள் மோசடிகள் மற்றும் தட்டுப்பாட்டை தடுப்பதற்கும் மக்கள் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கும் முகமாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அலுவலக தேவைகள் மற்றும் கைத்தொழில் நடவடிக்கைகளுக்காக எரிபொருள் கொள்வனவு செய்பவர்கள்
சம்பந்தப்பட்ட பிரதேச செயலகத்திடம் அனுமதி பெற வேண்டும்.
விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருளைப் பெற்றுக்கொள்பவர்கள் கமநல சேவை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும் – என தெரிவித்துள்ளார்.
#SriLankaNews
Leave a comment