வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராயவுள்ள முன்னாள் தளபதிகள்
அரசியல்இலங்கைசெய்திகள்

வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராயவுள்ள முன்னாள் தளபதிகள்!

Share

நாட்டில் இவ்வருடம் மார்ச் 31 ஆம் திகதியில் இருந்து மே 9 ஆம் திகதி வரை இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் தளபதிகள் மூவர் அடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார்.

கடற்படையின் Admiral of the Fleet வசந்த கரன்னாகொட இந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கவுள்ளார்.

ஜெனரல் தயா ரத்நாயக்க மற்றும் விமானப்படையின் Marshal of the Air Force ரொஷான் குணதிலக்க ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான இல்லத்துக்கு அருகில் இடம்பெற்ற கலவரம் மற்றும் அதன் பின்னர் காலிமுகத்திடல், கொள்ளுப்பிட்டி உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து ஆராய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையோரிடம் நாளை முதல் விசாரணைகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...