பராட்டா
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

50 ரூபாவாக உயர்வடைந்தது பராட்டாவின் விலை!

Share

கொழும்பு உட்பட நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள அனைத்து சிற்றுணவகங்களிலும் சிற்றுண்டிகளின் விலைகள் மீளவும் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிவாயு நெருக்கடியின் காரணமாக விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சிற்றுணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முட்டை ரொட்டி, பராட்டா, றோல்ஸ், பெட்டிஸ், மரக்கறி ரொட்டி, அப்பம், கறி பனிஸ் உள்ளிட்ட அனைத்து சிற்றுண்டிகளின் விலைகளும் அதிகரித்துள்ள naது.

அத்துடன், தேநீர், பால் தேநீர் என்பனவற்றின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

முட்டை ரொட்டி மற்றும் தோசை என்பனவற்றின் விலை 100 ரூபாவாக அதிகரித்துள்ளது.

பராட்டாவின் விலை 50 ரூபாவாக உயர்வடைந்துள்ளது எனச் சிற்றுணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உணவுப் பொதியின் விலை அதிகரிப்புடன், பொதுமக்கள், காலை உணவாக சிற்றுண்டிகளை உண்பதற்குப் பழக்கப்பட்டிருந்தனர்.

எனினும், கறியுடன் முட்டை ரொட்டி ஒன்றின் விலை 150 ரூபாவாகவும், கறியுடன் 3 பராட்டாவின் விலை 200 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கறியுடன் அரை இறாத்தல் பாணின் விலை 170 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

றோல்ஸ், பெட்டிஸ், மரக்கறி ரொட்டி, முட்டை பனிஸ் மற்றும் சீனி சம்பல் பனிஸ் உள்ளிட்ட சிற்றுணடிகளின் விலை 100 ரூபா வரையில் அதிகரிக்க சிற்றுணவக உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, அப்பம் ஒன்றின் விலை 50 ரூபாவாகவும், முட்டை அப்பத்தின் விலை 100 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேநீரின் விலை 50 ரூபாவாகவும், பால் தேநீரின் விலை 100 ரூபாவாகவும் உயர்வடைந்துள்ளது.

மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு, எரிவாயு நெருக்கடி உள்ளிட்ட மேலும் சில பிரச்சினைகள் காரணமாக 65 சதவீதத்துக்கும் அதிகமான சிற்றுணவகங்கள் மூடப்பட்டுள்ளன என்று ஐக்கிய தேசிய சுயதொழில் புரிவோரின் வர்த்தக சங்கத்தின் தலைவர் பிரதீப் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...