ranil
அரசியல்இலங்கைசெய்திகள்

பாரிய உணவுத் தட்டுப்பாடு ஏற்படலாம்! – ரணில் அபாய எச்சரிக்கை

Share

இந்த வருடத்துக்குள் இலங்கை பாரிய உணவுத் தட்டுப்பாட்டுக்கு முகம்கொடுக்க நேரிடலாம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இந்த நிலைமை இலங்கைக்கு மாத்திரமன்றி முழு உலகத்துக்கும் ஏற்படும் என்றும், இதற்கு முகம்கொடுப்பதற்காக உலக உணவுத் திட்டமும் அமெரிக்கா போன்ற நாடுகளும் தயாராகி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் ஏற்படக் கூடிய நிலைமை தடுப்பதற்காக நாட்டில் பயிர்ச் செய்கைகளை ஊக்கப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட நகர பிரதேசங்களில் ஏற்படக் கூடிய நிலைமையைத் தடுப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்களை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
im 83941943
செய்திகள்உலகம்

சீன இராணுவத்தில் அதிரடி சுத்திகரிப்பு: மிகச்சக்திவாய்ந்த ஜெனரல் ஜாங் யௌஷியா விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்!

ஒழுக்கக் குறைபாடு மற்றும் சட்ட மீறல்கள் தொடர்பாக, சீன இராணுவத்தின் மிக உயர்ந்த பதவியில் உள்ள...

Untitled 113 2
இலங்கைசெய்திகள்

தனியார் மற்றும் அரை அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்: EPF நிதியில் மாற்றமில்லை என அரசாங்கம் உறுதி!

தனியார் மற்றும் அரை அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் எதிர்காலப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அவர்களுக்கெனப்...

sajith rw 2 800x533
செய்திகள்அரசியல்இலங்கை

சஜித் மற்றும் ஐதேக தலைவர்களுக்கு இடையில் தீர்க்கமான சந்திப்பு!

இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி...

26 697477a9b13c1 1
செய்திகள்இலங்கை

விளக்கமறியலில் உள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் திடீர் சுகவீனம்: திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதி!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர், ஏற்பட்ட திடீர் நோய் நிலைமை காரணமாகத் திருகோணமலை பொது...