கொத்து ரொட்டி, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவு பொதிகள் மற்றும் பால் தேநீர் ஆகியவற்றின் விலைகள் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.
லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர் விலையை அதிகரித்த காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.
ப்ரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினால் அதிகரித்துள்ளன.
இதனால் பாண் உள்ளிட்ட பிற பேக்கரி உணவு உற்பத்தி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் 450 கிராம் பாணின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Leave a comment