image 93eb0f9f46
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

புனர்வாழ்வு நிலையத்திலிருந்து ஐவர் தப்பியோட்டம்!

Share

வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து நேற்று மாலை 5 பேர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

22 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்ட 05 கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு வழங்கப்பட்டு வாருகின்றது.

இந்தநிலையில் குறித்த புனர்வாழ்வு நிலையத்தில் நீதிமன்ற உத்தரவுக்கமைய தங்க வைக்கப்பட்டு புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்களில் 5 பேரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட போதே குறித்த 5 பேரும் தப்பியோடியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த பகுதியில் புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து தப்பியோடியவர்களை கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 5
இலங்கைசெய்திகள்

WhatsApp பயன்படுத்தும் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் அண்மைய காலமாக WhatsApp ஊடாக மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் ஹேக்கிங் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக...

11 5
இந்தியாசெய்திகள்

அழுத்தத்தில் தவெக – விஜயின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: உள்ளே நுழையும் மோடி அரசு

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜயின் பாதுகாப்பு குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறித்த விடயம்...

13 5
இந்தியாசெய்திகள்

சாரதி அனுமதி பத்திர விநியோகத்தில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்

சாரதி அனுமதி பத்திரங்கள் செல்லுபடியாகும் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது....

10 5
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டு மோகம் காட்டி மோசடி! மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் விவசாய வேலை வாய்ப்புகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதாகக் கூறி சில தனிநபர்கள் அல்லது குழுக்கள் சமூக...