image c222688151
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பண மோசடி! – பெண்ணுக்கு எதிராக இளைஞர்கள் முறைப்பாடு

Share

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி தம்மிடம் இருந்து 99 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பணத்தினை மோசடி செய்துள்ளார் என பெண்ணொருவருக்கு எதிராக இரு இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் தம்மை கனடாவிற்கு அனுப்புவதாக ஆசை வார்த்தைகள் கூறி பணத்தினை கடந்த ஏப்ரல் மாதம் பெற்றுக்கொண்டதாகவும் , 7 மாதங்கள் கடந்த நிலையில் இதுவரையில் தம்மைவெளிநாடு அனுப்புவதற்கான எந்த ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை,

அந்நிலையில் அவரிடம் நாம் பணத்தினை மீள கேட்ட போது , கொழும்பில் உள்ள முகவர் ஒருவருக்கு தான் பணத்தினை செலுத்தி விட்டதாகவும் , தற்போது அவரது தொலைபேசி துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.

தாம் கொடுத்த பணத்தினை அவரிடமிருந்து மீள பெற்று தர வேண்டும் என கோரியே பொலிஸ் நிலையத்தில் இளைஞர்கள் முறைப்படு செய்துள்ளனர்.

சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை பகுதிகளை சேர்ந்த இரு இளைஞர்களில் ஒருவர் 55 இலட்ச ரூபாயும் , மற்றையவர் 44 இலட்சத்து 35ஆயிரம் ரூபாயும் குறித்த பெண்ணிடம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...