3
இலங்கைசெய்திகள்

இலங்கையில் வேகமாக பரவும் நோய் தொற்று!

Share

இலங்கையில் வேகமாக பரவும் நோய் தொற்று!

நீர் மற்றும் மண்ணின் ஊடாக பரவும் பக்டீரியா ஒன்றினால் மண் காய்ச்சல் எனப்படும் நோய் பரவி வருவதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (20.06.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சங்கத்தின் தலைவர் பேராசிரியர் இனோகா இதனை தெரிவித்துள்ளார்.

இந்த நோய் அதிகளவு உயிரிழப்பை ஏற்படுத்தும் என்றும்,மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டம், வடமேல் மாகாணத்தின் புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இந்நோய் பதிவாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைய மழையுடனான காலநிலையில் நீர் மற்றும் மண்ணின் ஊடாக பரவும் பக்டீரியாவினால் இந்த மண் காய்ச்சல் நோய் பரவி வருவதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. பாதங்களில் ஏற்படும் காயங்கள், அழுக்கு நீர் போன்றவற்றின் ஊடாக இந்த பக்டீரியாக்கள் உள்நுழைவதாக வைத்தியர் எச்சரித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gun p
இலங்கை

டெங்கு ஒழிப்பில் சிக்கியது துப்பாக்கி.

பெலவத்தை பகுதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனை ஓன்றின்...

harsa
இலங்கை

நூலிழையில் உயிர் பிழைத்தார் ஹர்ஷ டி சில்வா!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 20ஆம் திகதி மாலை...

car bike
இலங்கை

நுவரெலியாவில் கோர விபத்து.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், மல்லிப்பூ சந்திக்கு அண்மையில் நேற்று மாலை நுவரெலியா நோக்கி...

Missing Persons
இலங்கை

காணாமல் போனவர்களுக்கு  நடந்தது என்ன ?

இறுதி போரில் இராணுவத்தில் சரணடைந்த 500 பேர் தொடர்பில் இதுவரை எவ்வித தகல்களும் இல்லை. இவ்வாறு...