BVZU3f3tIGkKCm1CJWBo 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நான்கு பிள்ளைகளின் தந்தை படுகொலை!

Share

தமிழ்க் குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என்று நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு, மட்டக்குளியைப் பிறப்பிடமாகவும் நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நான்கு பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் சபாரத்தினம் (வயது 51) என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவரின் வீட்டுக்குள் நேற்றிரவு 10 மணியளவில் வாள்களுடன் புகுந்த இனந்தெரியாத நபர்கள் கொலையைப் புரிந்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த குடுமபஸ்தரின் உடலில் 10 இற்கும் மேற்பட்ட வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவரும் நீர்கொழும்பு பொலிஸார், கொலைச் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைதாகவில்லை என்று தெரிவித்தனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...