7 41
இலங்கைசெய்திகள்

தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

Share

தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

தென் கொரியாவில் (South Korea) கடற்றொழில் துறையில் தொழில் வாய்ப்பைப் பெற்ற மேலும் 120 பேர் கொண்ட குழுவொன்று நேற்று (25) தென் கொரியாவுக்குச் சென்றுள்ளது.

இலங்கையின் (Sri Lanka) வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுவில் மூன்று பெண்களும் உள்ளடங்குகின்றனர், தென்கொரிய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கைக்கு இந்த தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இதேவேளை, கடந்த ஆறாம் திகதியும் தென் கொரியாவில் உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற்ற 100 இலங்கையர்கள் தென் கொரியாவுக்குச் சென்றனர்.

Share
தொடர்புடையது
சீரற்ற காலநிலை
இலங்கை

காலநிலை தாக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகரிப்பு – துரித கதியில் இடம்பெறும் சீரமைப்பு பணிகள்.

தற்போது நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 ஆயிரத்து...

கைக்குண்டுகள்
இலங்கை

இரத்மலானை பகுதியில் வீட்டின் மேல் வீசப்பட்ட கைக்குண்டுகள்.

இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...