15 15
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான நிதியுதவிகளை மீள ஆரம்பிக்கும் தென் கொரியா

Share

இலங்கைக்கான நிதியுதவிகளை மீள ஆரம்பிக்கும் தென் கொரியா

தென் கொரியாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கியான (கொரியா எக்ஸிம்பேங்க்), இலங்கையின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவி சலுகைக் கடன் திட்டங்களை மீண்டும் ஆரம்ப்பிப்பதற்கான அதன் முடிவை இலங்கையின் நிதி அமைச்சகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தென்கொரிய உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவும், இலங்கையும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்த பின்னர் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில், ருவன்வெல்ல நீர் வழங்கல் திட்டம் உட்பட ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் நிர்மாணத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை மீள ஆரம்பிக்க இந்த தீர்மானம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரிய குடியரசிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதில் இந்த நடவடிக்கை ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.

இது நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே வேளையில் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் ஸ்திரப்படுத்துவதற்கும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முக்கிய முடிவின் மூலம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தித் திட்டம், பயன்பாட்டுத் திட்டங்கள், சுகாதாரத் துறை மேம்பாட்டுத் திட்டங்கள், கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படவுள்ளன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...