நாட்டில் கடந்த முதலாம் திகதி முதல் அவசரகால நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த அவசரகால நிலை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான விசேட கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.
குறித்த கூட்டத்தில் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை தொடர்பில் உள்ள பின்னணி மற்றும் அதன் காரணம் என்பவை தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
அண்மையில், மிரிஹான பகுதியில் உள்ள ஜனாதிபதி இல்லம் சுற்றிவளைக்கப்பட்டு மிகப்பெரும் போராட்டம் இடம்பெற்றது.
இதனையடுத்து, ஜனாதிபதியால் நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டமை குறிபிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment