13 19
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் மீண்டும் கூடவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு

Share

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் மீண்டும் கூடவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு

தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka )இந்த வாரம் மீண்டும் கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய, தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு கூடுகின்றது.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு தேர்தல்கள் ஆணைக்குழு கூடுவது இதுவே முதல் முறையாகும்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பில் இதன்போது தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடத்தப்படும் என அண்மையில் கண்டியில் (Kandy) இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக, இத்தேர்தலை விரைவாக நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனமும் செலுத்தப்பட்டுள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு இதுவரை பணம் ஒதுக்கப்படவில்லை எனவும், இது தொடர்பில் இந்த கலந்துரையாடலில் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
vellam
இலங்கை

மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள் – கவலையில் மக்கள்

ஹட்டன் – டிக்கோயாவில் பல குடியிருப்புகள் மற்றும் தாழ் நிலப் பகுதிகள், மத்திய மலைநாட்டில் பெய்து...

பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...