ஹட்டன் – டிக்கோயாவில் பல குடியிருப்புகள் மற்றும் தாழ் நிலப் பகுதிகள், மத்திய மலைநாட்டில் பெய்து வரும் தொடர் கடும் மழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இன்றைய தினம், ஹட்டனிலிருந்து காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு பாயும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்து ஓடியதன் காரணமாக இந்த வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கால்வாயின் இருபுறமும் உள்ள பல வீடுகளும் ஒரு வாகனம் திருத்தும் நிலையமும் நீரில் மூழ்கியுள்ளது.அத்துடன், 2013ஆம் ஆண்டிலும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்து ஓடியதன் காரணமாக, இதேபோன்று ஒரு பேரழிவு ஏற்பட்டதாகவும், மீண்டும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்து ஓடுவதால் தங்களது வீடுகள் நீரில் மூழ்கியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மகாவலி ஆறு பெருக்கெடுத்து ஓடியதன் காரணமாக நாவலப்பிட்டிய பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதி ஒன்று நீரில் மூழ்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.