hgfn
இலங்கை

வெள்ள அபாயம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை.

Share

மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை ஏற்படுவது குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் குறித்த அறிவித்தலானது விடுக்கப்பட்டுள்ளது.

​மகாவலி கங்கையின் மேல் நீரேந்துப் பகுதிகளில் கடந்த சில மணித்தியாலங்களில் பெய்த மழைவீழ்ச்சி, மேலும் மழை பெய்யக்கூடும் என்ற முன்னறிவிப்பு மற்றும் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்படக்கூடிய அபாயம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு, மகாவலி கங்கை வடிநிலத்தின் உடுநுவர, உடபலாத, யடிநுவர, தொலுவ, கொத்மலை, பஸ்பாகே, கங்க இஹல கோரள, பஸ்பாகே கோரள, கங்கவட்ட கோரள, ஹாரிஸ்பத்துவ மற்றும் பாததும்புர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கே குறித்த பெருவெள்ள அபாய அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

​மேலும், அப்பகுதிகளில் மகாவலி கங்கைக்கு அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ள நிலைமையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் பொதுமக்களைக் கோரியுள்ளது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...