2 3
ஏனையவை

நீங்கள் பட்டம் பெற்றுள்ளீர்கள் என்பதை நிரூபியுங்கள் : தொடர் சர்ச்சையில் சபாநாயகர்

Share

நீங்கள் பட்டம் பெற்றுள்ளீர்கள் என்பதை நிரூபியுங்கள் : தொடர் சர்ச்சையில் சபாநாயகர்

பாநாயகர் கலாநிதி அசோக ரன்வல தனது பட்டப்படிப்பை முடித்திருந்தால் அதனை நிரூபிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சவால் விடுத்துள்ளார்.

தனத முகநூல் பக்கத்தில் பதிவொன்றின் மூலமே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், அவ்வாறு செய்யத் தவறினால் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்றும், சபாநாயகர் குறித்த விடயத்திற்கு பதிலளிக்கத் தவறினால், தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சபாநாயகர் அசோக ரன்வல தனது கல்வித் தகமை குறித்து பொய்யான தகவல்களை வெளியிட்டிருந்தால் அவர் பதவி விலக வேண்டுமென சமூக மற்றும் தொழிற்சங்க செயற்பாட்டாளர் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி (Nirmal Ranjith Dewasiri ) தெரிவித்துள்ளார்.

தனது கல்வித் தகமை தொடர்பில் மெய்யான தகவல்களை வெளியிடத் தவறினால் அவர் பதவி விலக வேண்டும் அல்லது பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டுமென பேராசிரியர் கோரியுள்ளார்.

மேலும், அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் தொடர்பில் ஆழமாக சிந்திக்க வேண்டுமானால் சபாநாயகர் அசோக ரன்வலவின் பட்டம் தொடர்பில் தேடி அறிந்து, பிழையான தகவல்கள் வழங்கப்பட்டிருந்தால் அவரை பதவி விலகுமாறு வலியுத்த வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள நிர்மால் ரஞ்சித், ரன்வல பிழை செய்திருந்தால் அதில் இரண்டு பிழைகள் உள்ளன. இல்லாத பட்டமொன்று இருப்பதாக மக்களிடம் கூறியமை மற்றும் பொய்யான கல்வித் தகமைகயை காண்பித்து முக்கிய பதவி ஒன்றை வகிக்க முடியும் என கருதியமை ஆகிய இரண்டு பிழைகளை செய்துள்ளார் என குற்றம் சுமத்தியுள்ளார்.

அசோக ரன்வல தனது இளங்கலை பட்டத்தை மொரட்டுவ பல்கலைக்கழகத்திலும், கலாநிதி பட்டத்தை ஜப்பானிலும் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான ஓர் பின்னணியிலேயே சபாநாயகர் அசோக ரன்வலவின் கல்வித் தகமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Gunmen
ஏனையவை

விமான நிலையத்தில் கைதான கடத்தல் கும்பல்.

இலங்கை குடும்பம் ஒன்றை தாய்லாந்தின் டொன் முவாங் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கஜகஸ்தானுக்கு கடத்த...

zelan 5
உலகம்ஏனையவை

ஐரோப்பாவின் வான் கட்டமைப்பு – ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அவசர கோரிக்கை!

ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பை உருவாக்கும் முயற்சிகள்...

ஏனையவை

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт

Обзор 1хБет: линия событий на завтра для ставок на спорт Меня зовут...

ஏனையவை

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir?

Pinco Casino Güncel Giriş: En İyi Oyun Deneyimi Nasıl Elde Edilir? Pinco...