140088770 fresh eggs white duck egg box produce eggs fresh from the farm organic
இலங்கைசெய்திகள்

நாளை முதல் முட்டை 55 ரூபா

Share

நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் சந்தைகளில் லொறிகள் மூலம் நாளை (28ஆம் திகதி) முதல் வெள்ளை முட்டையை 55 ரூபாவுக்கு விற்பனை செய்ய கோழிப்பண்ணை உரிமையாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

தினமும் 70 லட்சமாக இருந்த முட்டை உற்பத்தி தற்போது 35 முதல் 40 லட்சமாக குறைந்துள்ளது.

சந்தையில் முட்டை தட்டுப்பாடு மற்றும் ஒரு முட்டை 70 ரூபாவுக்கு மேல் விற்பனை செய்யப்படுவது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (26) விவசாய அமைச்சில் இடம்பெற்றது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு இடையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஒரு முட்டை உற்பத்தி செய்ய 46.00 ரூபா செலவாகும் என்றும், மொத்த வியாபாரிக்கு 49.50 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்தால், மொத்த வியாபாரி சில்லறை விற்பனையாளருக்கு 53.00 ரூபாவுக்கு முட்டையை விற்கலாம் என்றும் விவாதிக்கப்பட்டது.

இதன்படி, சில்லறை விற்பனையாளர் 2.00 ரூபா இலாபத்தை வைத்து ஒரு முட்டையை 55.00 ரூபாவுக்கு நுகர்வோருக்கு விற்பனை செய்ய முடியும் என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

அதிக லாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் சில்லறை வியாபாரிகளுக்கு முட்டையை விற்பனை செய்யாமல், ஹோட்டல், பேக்கரிகளுக்கு 53.00 ரூபாவுக்கு மொத்த வியாபாரிகள் முட்டை விற்பனை செய்து வருவதும், இதனால் சந்தையில் செயற்கையாக முட்டை தட்டுப்பாடு ஏற்படுவதும் தெரியவந்தது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...