1 22
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவின் நெருக்கமானவர்களுக்கு காத்திருந்த சிக்கல்!

Share

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கையை செயற்படுத்தினால் தனக்கு இணக்கமானவர்கள் நெருக்கடிக்குள்ளாகுவார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் இடம்பெற்று ஐந்தாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும், இதுவரை நீதி கிடைக்கவில்லை. குண்டுத்தாக்குதலின் உண்மை தன்மை வெளிப்படுத்தப்படவில்லை.

ஆட்சிக்கு வந்து 3 மாத காலத்தில் உண்மை சூத்திரதாரியை பகிரங்கப்படுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாக்குறுதியளித்தார். ஆனால் அவர் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் குண்டுத்தாக்குதல்கள் பற்றி பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கியுள்ளார். தனது ஆட்சியில் உண்மையை பகிரங்கப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஆகவே இந்த அரசாங்கத்திலாவது நீதி கிடைக்குமா என்பதை எதிர்பார்த்துள்ளோம்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆகிய அறிக்கை சமர்ப்பித்துள்ளன.

இந்த அறிக்கையின் பரிந்துரைகளை முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் செயற்படுத்தவில்லை.

அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்தினால் தனக்கு இணக்கமானவர்கள் நெருக்கடிக்குள்ளாகுவார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அவதானம் செலுத்தினாரே தவிர இவ்விடயத்தில் கரிசணை கொள்ளவில்லை. தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இந்த பிரச்சினைகள் ஏதும் கிடையாது.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும்நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை ஆகியவற்றின் பரிந்துரைகளை தாராளமாக நடைமுறைப்படுத்தலாம். இருப்பினும் அரசாங்கம் அது குறித்து கவனம் கொள்ளவில்லை.

குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பும் சந்தர்ப்பத்தில் கடந்த கால விசாரணைகளின் விபரங்களே குறிப்பிடப்படுகின்றன. புதிதாக எந்த தகவல்களும் குறிப்பிடப்படுவதில்லை.

கோட்டாபய ராஜபக்சவை போன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் குண்டுத்தாக்குதல் விவகாரத்தை தனது வெற்றிக்கு பயன்படுத்திக் கொண்டார் என்ற நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் தோற்றுவிக்க கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...