பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பரவுவதை தடுக்கும் வகையில் மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் கண்காணிப்பு குழுக்களை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க கடந்த வெள்ளிக்கிழமை மேல் மாகாண பிரதம செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்னவுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
#SriLankaNews
Leave a comment