202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் நுகர்ந்த பெண்கள் கைது!

Share

யாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடொன்றுக்குள் வைத்து போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இரண்டு பெண்களை நேற்றிரவு பொலிஸார் கைது செய்ததுடன், அவர்கள் வசமிருந்த இரண்டு கிராம் போதைப்பொருளையும் கைப்பற்றினார்.

யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் வைத்து போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருப்பதாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த இரண்டு பெண்களும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவின் போதைத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சாயிமேனன் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.

28 மற்றும் 29 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன், விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...