202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போதைப்பொருள் நுகர்ந்த பெண்கள் கைது!

Share

யாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடொன்றுக்குள் வைத்து போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த இரண்டு பெண்களை நேற்றிரவு பொலிஸார் கைது செய்ததுடன், அவர்கள் வசமிருந்த இரண்டு கிராம் போதைப்பொருளையும் கைப்பற்றினார்.

யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் வைத்து போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருப்பதாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த இரண்டு பெண்களும் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவின் போதைத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சாயிமேனன் தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.

28 மற்றும் 29 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதுடன், விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 69405094615b9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முல்லைத்தீவில் போதைப்பொருள் கடத்தல்: திருமணமான தம்பதியர் உட்பட ஐவர், ஐஸ் மற்றும் வாள்களுடன் கைது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட திருமணமான தம்பதியர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப்...

95570777 trainafp
இலங்கைசெய்திகள்

மீண்டும் திறக்கப்பட்ட பாடசாலைகள்: விடுமுறை மற்றும் பரீட்சை காரணமாக பாடசாலைகள் மூடப்படும் திகதிகள் அறிவிப்பு!

சமீபத்திய இயற்கை அனர்த்தங்கள் காரணமாக மூடப்பட்டிருந்த பல பாடசாலைகள் இன்று (டிசம்பர் 16) மீண்டும் கல்வி...

95570777 trainafp
செய்திகள்

கிழக்கு ரயில் தண்டவாளத்தில் சேவை மீண்டும் ஆரம்பம்: 18 நாட்களுக்குப் பிறகு சீன விரிகுடாவிலிருந்து சீதுவா நோக்கிப் புறப்பட்டது முதல் சரக்கு ரயில்!

வெள்ளத்தால் சேதமடைந்த கிழக்கு ரயில் தண்டவாளங்களில் பழுதுபார்ப்புப் பணிகள் நிறைவடைந்த 18 நாட்களுக்குப் பிறகு, இன்று...

919387 00900779
இலங்கைசெய்திகள்

நெல் இருப்பை அரிசியாக்கி சந்தையில் விநியோகிக்க அமைச்சரவை அங்கீகாரம்!

நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்வனவு செய்யப்பட்டுள்ள நெல் இருப்பை அரிசியாக்கி சந்தைக்கு விநியோகிக்கும் யோசனைக்கு அமைச்சரவை...