12 31
இலங்கைசெய்திகள்

விளையாட்டு அமைச்சின் வாகனத்தை முறைகேடாக பயன்படுத்திய சாரதி கைது

Share

விளையாட்டுத்துறை அமைச்சின் வாகனமொன்றை முறைகேடாகப் பயன்படுத்திய சாரதியொருவர் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வெசாக் பௌர்ணமி தினத்தில் விளையாட்டுத்துறை அமைச்சின் போக்குவரத்துப் பிரிவுக்கு வந்த அதன் சாரதியொருவர், அலுவல் ரீதியான பயணமாக செல்வதாகத் தெரிவித்து சொகுசு வாகனமொன்றை வெளியில் எடுத்துச் சென்றுள்ளார்.

அதன் பின்னர், இரண்டு நாட்கள் கழித்து இரவு நேரமொன்றில் திருட்டுத்தனமாக வாகனத்தை மீண்டும் அமைச்சு வளாகத்தினுள் கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளார்.

சம்பவம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சின் பாதுகாப்பு அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில், மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் குருந்துவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்

இந்நிலையில், நேற்றைய தினம் குறித்த சாரதி மீண்டும் கடமைக்குத் திரும்பிய நிலையில், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் குறித்த வாகனத்தை சட்டவிரோத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தி இருந்தாரா அல்லது வாடகைப் பயணங்களுக்கு வழங்கியிருந்தாரா போன்ற விடயங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...

bike accident 1
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி.

நேற்றைய தினம், சிலாபம் – ஆனமடுவை வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்...

oil price 14 2
இலங்கை

மீண்டும் அதிகரிக்கிறதா எரிபொருள் விலை ?

இன்று நள்ளிரவு முதல், மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் உலக சந்தையில்...