யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னை விமான நிலையம் வரை அடுத்த வாரம் முதல் நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்படும் என வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தெரிவித்தார்.
அத்துடன் யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து இரத்மலானை விமான நிலையத்துக்கான விமான சேவையும் ஆரம்பமாகவுள்ளது எனவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் மாகாண ஆளுநரின் நடவடிக்கையில் யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் வெளிப்புற அழகை மெருகூட்டுவதற்காக வடக்கு மாகாண சபையினால் அழகுபடுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
#SriLankaNews
Leave a comment