யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 6 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன் பிடி துறை முகத்தில் இருந்து மீன்பிடிக்க புறப்பட்ட மீனவர்களில் ஆறு பேர் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைத்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் கடந்த திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட 6 தமிழக மீனவர்களும் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
அதனை அடுத்து நீதவான் 06 மீனவர்களையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
#SriLankaNews
Leave a comment