நாட்டில் தற்போது இனங்காணப்படும் தொற்றாளர்களில் நூற்றுக்கு 98 வீதமானோருக்கு டெல்டா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்படுகிறது.
அத்துடன் டெல்டா வைரஸ் பரவலால் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும் என நீதி அமைச்சர் எம். அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களம், தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையம் என்பனவற்றால் ஒழுங்கு செய்யப்பட்ட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் டெல்டா வைரஸ் மிக வேகமாக பரவி வருகின்றது. இந்த நிலையில் அரசின் வருமானத்திலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் வருமானம் மற்றும் சுற்றுலாத்துறை வருமானம் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய அரசு ஒரு இக்கட்டான சூழலில் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் சாதாரண விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய அரிசியை அதிக விலைக்கு விற்கின்றனர். அல்லது பதுக்கி வைக்கின்றனர். எனவே அனைவரும் பொறுப்புணர்ந்து செயற்படுதல் அவசியமாகும் என்று தெரிவித்துள்ளார்.
Leave a comment