image e7adb063ac
இலங்கைசெய்திகள்

சுகாதார சேவைக்கு ஆபத்து!

Share

இலங்கையில் நிலவும் மருந்து பொருட்கள், ஒருமுறை பயன்படுத்தும் மருத்துவ உபகரணங்களுக்கான பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு போன்ற காரணங்களால் சுகாதார சேவை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கம் எச்சரித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட காரணங்களால் அவசர மற்றும் பொது சுகாதார சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கம் ஒக்டோபர் மாதம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வருடத்தின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் செப்டெம்பர் மாதத்தில் நிலைமை மோசமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள சங்கம், பல சத்திரசிகிச்சைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் இரத்த மாற்று சேவைகள் சீர்குலைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், தோட்ட மக்கள் மத்தியில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளதாகவும், தரமான சுகாதார சேவையைப் பெறுவது மிகவும் கடினமாகிவிட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், செப்டெம்பர் மாதத்துக்குள் தோட்டங்களில் உள்ள நான்கில் மூன்று குடும்பங்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தொற்றா நோய்களான இதய நோய், நீரிழிவு, மனநோய் போன்றவற்றுக்கு சிகிச்சை பெறுவதில் கணக்கெடுப்பில் பங்கேற்ற மூன்றில் ஒரு குடும்பத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சங்கம், சத்திரசிகிச்சைகள் இரத்து செய்யப்பட்டதால் கணக்கெடுப்பில் பங்கேற்ற குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...