202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தங்கச் சங்கிலி அறுப்பு! – பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

Share

மோட்டார் சைக்கிளில்  பயணித்தவாறு, வீதியில் செல்லும் பெண்கள் அணிந்திருக்கும் தங்கச் சங்கிலிகளை பறித்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த பொலிஸ்  கான்ஸ்டபிள் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக இரத்தினபுரி பாணமுர பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான  பொலிஸ் கான்ஸ்டபிள் தங்க சங்கிலிகளைப் பறிப்பதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டது.

சந்தேக நபர் இரத்தினபுரி, கல்தொட்ட நிலையத்தில் பணிபுரிவதுடன் கேரகல பொலிஸ் சோதனைச்சாவடியில் கடமையாற்றி வந்துள்ளார்.

பாணமுற பொலிஸ்  பிரதேசத்தில் இரண்டு லட்ச ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலி, 138,000 ரூபா பெறுமதியான பெண்டனுடன் கூடிய தங்க சங்கிலி மற்றும் கட்டுவன பொலிஸ்  பிரவேசத்தில் தங்கச் சங்கிலியை அறுத்ததில் இவருக்கும் தொடர்புள்ளது என இதுவரை மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலைகள் அதிரடி உயர்வு: இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் அமுல்!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பானது...

Untitled 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு: 6-ஆம் நாளில் மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் மீட்பு!

யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் ஆறாம் நாள்...