வே.இராதாகிருஷ்ணன் 55
இலங்கைசெய்திகள்

‘பார் கொத்தணியால் மயானம் நோக்கி நாடு! – ராதாகிருஸ்ணன் விளாசல்

Share

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுபானசாலைகளைத் திறந்து மக்களை கூட்டம் கூட்டமாக ஒன்றுகூட விட்டமையானது நாட்டு மக்களை விரைவில் சுடுகாடு நோக்கி அழைத்து ஒட்டுமொத்த நாட்டையும் சுடுகாடாக மாற்றும் அரசின் செயலாகும் .

இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவிலிருந்து நாட்டை மீட்டெடுக்க போராடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் நாடு மிகப்பெரிய விளைவை சந்திக்கவுள்ளது.

நாட்டு மக்களை கொரோனா அரக்கனிடம் பலி கொடுக்க அரசு தயாராகிவிட்டது.

ஊரடங்கை அடுத்த மாதம் வரை நீடித்து திடீரென மதுபானசாலைகளை திறந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அரசு.

அனைத்து நகரங்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் மக்கள் கூட்டம் கூட்டமாக மதுபானங்களை பெறுகின்றனர். இதன் தாக்கம் இன்னும் சில நாள்களில் தெரியவரும்

அத்தியாவசிய பொருள்களை வாங்க சென்றவர்களை அடித்து துரத்தும் சுகாதாரத் தரப்பினர் இன்று மதுபான போத்தல்களை வாங்கும்போது வேடிக்கை பார்த்து கை கட்டிக்கொண்டு நிற்கின்றனர்.

இன்னும் சில நாள்களில் பார் கொத்தணி உருவாக வாய்ப்பை ஏற்படுத்தி நாட்டை சுடுகாடாக மாற்ற அரசு எத்தணிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Valikamam Land Release
இலங்கை

காணிவிடுவிப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட ஈ.பி.டி.பி கட்சியின் உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு!

பலாலி காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில், ஈ.பி.டி.பி கட்சியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர்...

Colombo Hotel
இலங்கை

பட்டப்பகலில் நடத்தப்பட்ட கைவரிசை – போலி ஆசாமி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்கள்!

கடந்த 3 ஆம் திகதி, கொழும்பு – கம்பெனி வீதி பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு...

Cid Investigations 1
இலங்கை

கல்முனை ஆதார வைத்தியசாலை விவகாரம் – தலையிடுகிறதா CID!

அண்மைய நாட்களாக மிகப்பெரிய அளவிலான பேசுபொருளாக காணப்பட்ட கல்முனை ஆதார வைத்தியசாலை முஸ்லிம் பெண்களினுடைய ஆடை...

எஃப்.யூ. வூட்லர்
இலங்கை

வாகன சாரதிகளுக்கு காவல்துறையினர் விடுத்துள்ள எச்சரிக்கை!

மோட்டார் வாகன சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களினாலும் வாகனங்களினை அலட்சியமாக நிறுத்திச் செல்வதால், அவை...