வவுனியாவில் ஒரு வயது குழந்தை உட்பட மேலும் 36 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இனங்காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் என வவுனியா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் மற்றும் அன்டிஜென் பரிசோதனைகளின் முடிவுகள் நேற்று இரவு வெளியாகின.
அந்த முடிவுகளின்படி வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த ஒரு வயது குழந்தை உட்பட மேலும் 36 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.’
இந்தநிலையில் தொற்றாளர்களை தனிமைப்படுத்துவதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை இனங்கண்டு அவர்களையும் தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment