19 5
விளையாட்டுசெய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026: நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வரலாற்று வெற்றி!

Share

அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (8) நடைபெற்ற விறுவிறுப்பான ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், நியூசிலாந்து அணியை 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது. இதன் மூலம், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதுடன், சொந்த மண்ணில் கோப்பையைக் கைப்பற்றிய முதல் அணி மற்றும் தொடர்ச்சியாகத் தற்காத்து கோப்பையை வென்ற முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனைகளையும் இந்தியா படைத்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்த நியூசிலாந்து அணியின் தீர்மானம் இந்தியாவுக்குச் சாதகமாக அமைந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி அதிரடியாகச் செயல்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ஓட்டங்களைக் குவித்தது. இது டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு அணி பதிவு செய்த மிக உயர்ந்த ஓட்ட எண்ணிக்கையாகும். சஞ்சு சம்சன் 89 ஓட்டங்களையும், இஷான் கிஷன் 54 ஓட்டங்களையும், அபிஷேக் சர்மா 52 ஓட்டங்களையும் பெற்று அணிக்குப் பலம் சேர்த்தனர்.

256 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா 15 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி நியூசிலாந்து அணியின் சரிவுக்கு முக்கிய காரணமாக இருந்தார். அவருக்கு உறுதுணையாக அக்சர் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில், நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இந்திய அணியின் அபாரமான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு, உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் அவர்களின் ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியது. இந்தப் போட்டியின் நாயகனாக பந்துவீச்சில் அசத்திய ஜஸ்பிரிட் பும்ரா தெரிவு செய்யப்பட்டார். 2026 உலகக் கோப்பைத் தொடரை வெற்றியுடன் நிறைவு செய்த இந்திய அணியினருக்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...