CEB
இலங்கைசெய்திகள்

இலங்கை மின்சார சபைக்கு கோப் குழு அழைப்பு!

Share

இலங்கை மின்சார சபை எதிர்வரும் 09 ஆம் திகதி அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் 2018 மற்றும் 2019 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக எதிர்வரும் 07 ஆம் திகதி நகர அபிவிருத்தி அதிகார சபை, 08 ஆம் திகதி மொறட்டுவைப் பல்கலைக்கழகம் என்பனவும் கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளன. கோப் குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தலைமையில் கூடவுள்ளது.

அதேபோன்று, அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழுவின் சில கூட்டங்களும் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளன. எதிர்வரும் 07 ஆம் திகதி கமத்தொழில் அமைச்சு, 08 ஆம் திகதி இறக்குமதி ஏற்றுமதிக் கட்டுப்படுத் திணைக்களம், 09 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சு என்பன கோபா குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளன.

அதற்கு மேலதிகமாக எதிர்வரும் 10 ஆம் திகதி நாட்டில் நிலவும் உணவுத் தட்டுப்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல் வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு, கமத்தொழில் அமைச்சு, உணவு ஆணையாளர் திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம், சதொச நிறுவனம், பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை, தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகம், இலங்கை அரச (பொது) வர்த்தகக் கூட்டுத்தாபனம் என்பவற்றின் அதிகாரிகளின் பங்குபற்றலில் நடைபெறவுள்ளது.

கோபா குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண தலைமையில் கூடவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
09 A corruption
செய்திகள்இலங்கை

பிடியாணை, போதை வாகனம் உட்பட ஒரே நாளில் 5000க்கும் அதிகமானோர் கைது!

காவல்துறையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான நடவடிக்கைகளின் விளைவாக, பிடியாணை மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக ஒரே நாளில்...

images 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறையில் அதிர்ச்சிச் சம்பவம்:  மகளைத் தொடர்ச்சியாகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!

அம்பாறை மாவட்டம், பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ள புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில்...

1795415 01
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று சனிக்கிழமை...

aJqHp SD
செய்திகள்உலகம்

இந்தோனேசியா மத்திய ஜாவாவில் பாரிய மண்சரிவு: கடும் மழைவீழ்ச்சியால் 11 பேர் உயிரிழப்பு, 12 பேரைக் காணவில்லை!

இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் பெய்த கடும் மழைவீழ்ச்சியால் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி 11...