1770006808 dalai 6
செய்திகள்உலகம்

90 வயதில் கிராமி விருது வென்று தலாய் லாமா சாதனை: The Reflections ஆல்பத்திற்கு உயரிய அங்கீகாரம்!

Share

திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா, தனது 90 ஆவது வயதில் முதல்முறையாக ‘கிராமி’ (Grammy) விருதை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று (பெப்ரவரி 1) நடைபெற்ற 68 ஆவது கிராமி விருது வழங்கும் விழாவில் அவர் இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.

உலகின் உயரிய இசை விருதாகக் கருதப்படும் ‘கிராமி’ விருதினைத் திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலை லாமா முதல்முறையாக வென்றுள்ளார்.

தலாய் லாமாவின் “Meditations: The Reflections Of His Holiness The Dalai Lama”என்ற ஆல்பத்திற்காக, ‘சிறந்த ஒலி புத்தகம், கதை சொல்லல் மற்றும் விவரிப்பு’ பிரிவில் இந்த விருது வழங்கப்பட்டது.

இந்தத் துறையில் தலாய் லாமாவுடன் பல பிரபலங்கள் போட்டியிட்டனர்.

குறிப்பாக கிராமி விருது விழாவைத் தொகுத்து வழங்கிய நகைச்சுவை நடிகர் ட்ரெவர் நோவா, அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதியரசர் கெட்டன்ஜி பிரவுன் ஜாக்சன், மில்லி வெனில்லியின் ஃபாப் மோர்வன் ஆகிய அனைவரையும் பின்னுக்குத் தள்ளி தலாய் லாமா இந்த விருதினைத் தட்டிச் சென்றார்.

இந்த ஆல்பம் வெறுமனே பேசும் ஒலி புத்தகம் மட்டுமல்ல, இதில் இந்தியச் செவ்வியல் இசை மற்றும் தியானம் தொடர்பான கருத்துக்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் பிரபல சரோத் இசைக் கலைஞர் அம்ஜத் அலி கான் மற்றும் அவரது மகன்கள் அமன் அலி பங்காஷ், அயன் அலி பங்காஷ் ஆகியோரின் இசைப் பங்களிப்பு இதில் முக்கியமானது.

மன அமைதி, நல்லிணக்கம், ஆரோக்கியம் மற்றும் உலகளாவிய அன்பு ஆகியவற்றை மையமாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. ரூஃபஸ் வைன்ரைட், மேகி ரோஜர்ஸ் மற்றும் ஆன்ட்ரா டே போன்ற சர்வதேசக் கலைஞர்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.

தலாய் லாமா நேரில் கலந்துகொள்ளாததால், அவருக்குப் பதிலாக இசைக்கலைஞர் ரூஃபஸ் வைன்ரைட் மேடைக்கு வந்து விருதைப் பெற்றுக்கொண்டார்.  நிச்சயமாக நான் தலை லாமா அல்ல என நகைச்சுவையாகத் தனது உரையைத் தொடங்கிய அவர், இந்தப் புனிதமான திட்டத்தில் பங்கேற்றது தனது கௌரவம் எனத் தெரிவித்தார்.

இதே பிரிவில் பிரபல ஹொலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தனது முதல் கிராமி விருதை வென்று, ‘EGOT’ (Emmy, Grammy, Oscar, Tony) அந்தஸ்தைப் பெற்றவர் பட்டியலில் இணைந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...