1675419473 gavel 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஷமிந்திர ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு: ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான கொள்வனவு மோசடி விவகாரம்!

Share

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் இளைய மகனான ஷமிந்திர ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (02) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக 14 ஏர்பஸ் (Airbus) விமானங்களை கொள்வனவு செய்த கொடுக்கல் வாங்கல்களில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஷமிந்திர ராஜபக்ஷவை சந்தேக நபராகக் கருதி, அவரைக் கைது செய்து விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் சிஐடியினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முந்தைய நிர்வாகக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த விமானக் கொள்வனவு ஒப்பந்தம், கடந்த சில ஆண்டுகளாகப் பல்வேறு தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சட்ட நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.

Share
தொடர்புடையது
நவாலி திருவிழா
இலங்கை

நவாலி திருவிழாவிலும் அசம்பாவிதம் – பொதுமக்கள் பலரும் பாதிப்பு!

நேற்று இரவு, நவாலி அந்திரான் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவின் போது வாணவேடிக்கையால் பனை மரம் ஒன்றும்...

dengue original 1
இலங்கை

எழுபதை கடந்தது டெங்கு மரணங்கள்!

2026 இன் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 93,381 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்...

சுற்றிவளைப்புக்கள்
இலங்கை

அதிரடியாக மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றிவளைப்புக்கள் – 751 சந்தேக நபர்கள் கைது!

முழு நாடுமே ஒன்றாக நடவடிக்கையின் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் 751 சந்தேகநபர்கள் கைது...

சீன மின் விளக்குகள் பறிமுத
இலங்கை

ஆலய திருவிழாவில் ஏற்பட்ட அசம்பாவிதம் – நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்!

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது, நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம்...