இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் புனித சின்னங்கள் எதிர்வரும் பெப்ரவரி 4-ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ள நிலையில், அவற்றைப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான விசேட ஏற்பாடுகளைக் கொழும்பு கங்காராமய விகாரை நிர்வாகமும் பாதுகாப்புப் பிரிவினரும் மேற்கொண்டுள்ளனர்.
புனித சின்னங்கள் பெப்ரவரி 4-ஆம் திகதி இலங்கையை வந்தடையும். பெப்ரவரி 5-ஆம் திகதி முதல் 11-ஆம் திகதி வரை கங்காராமய விகாரையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக இவை வைக்கப்படும்.
கண்காட்சி நடைபெறும் நாட்களில் விகாரையைச் சூழவுள்ள பல வீதிகள் தற்காலிகமாக மூடப்படும் அல்லது ஒருவழிப் பாதையாக மாற்றப்படும்.
குறிப்பிட்ட பகுதிகளில் கனரக வாகனங்களின் நடமாட்டம் முழுமையாக மட்டுப்படுத்தப்படும். வாகன நெரிசலைத் தவிர்க்க விசேட தரிப்பிட வசதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து விகாரைக்குச் செல்ல பக்தர்களுக்காக விசேட போக்குவரத்து (Shuttle Services) வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்புக் காரணங்களுக்காக விகாரைக்கு வரும் பக்தர்கள் அதிகாரிகளின் சோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், ஒதுக்கப்பட்ட வாகன தரிப்பிடங்களை மாத்திரம் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.